தமிழக மாணவர்கள் பற்றி அப்படி பேசினேனா? மன்னிப்பு கேட்கமுடியாது என கூறிய நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழர்களுக்கு எதிராக பேசியதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் அதிகம் சேர்வதாகவும் அதனால் டெல்லி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பேசிய பிரகாஷ் ராஜ், “நான் தமிழன் இல்லை. கன்னடன். கெஜ்ரிவால் சொல்வது உண்மைதான்” என கூறியதாக பத்ரிக்கைகளில் செய்தி வந்தது.

இதனால் சர்ச்சை ஏற்பட்டு பிரகாஷ் ராஜுக்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இது பற்றி விளக்கம் அளித்துள்ள பிரகாஷ்ராஜ், “நான் பேசியதை திரித்து கூறி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளனர், மன்னிப்பு கேட்க முடியாது, டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்கும் கெஜ்ரிவாலுக்கு நான் ஆதரவு தெரிவித்தேன்” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்