தற்கொலை தாக்குதல்கள் குறித்து விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்கள் குறித்து விவாதத்திற்கு வழங்கப்பட்ட காலத்தை நீடிப்பது தொடர்பாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்கள் குறித்து விவாதத்திற்கு வழங்கப்பட்ட காலம், 2 மணித்தியாலங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்து. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய அதனை நீடிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் தற்போதை சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்