நீர்கொழும்பு மோதல் சம்பவம்: இருவர் கைது!

நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மதுபானம் அருந்தியிருந்த இருவருக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடே பின்னர் குழுக்களுக்கிடையிலான மோதலாக மாற்றம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் குறித்த சம்பவத்தில் யாருக்கும் பாரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பதுடன் பொருட் சேதங்கள் மாத்திரம் இடம்பெற்றிருந்ததாக ருவான் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நீர்கொழும்பில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இன்று காலை 7 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்