கட்டாய விடுப்பிலுள்ள பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை!

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று(திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் திறைசேரியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மற்றும் ஊழல் ஒழிப்பு குழுவின் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாய விடுமுறை வழங்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்