பொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் வேண்டுகோள்!

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சிதறுண்ட 56 உடற்பாகங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி முதல் தங்களது உறவினர்களில் எவரேனும் காணாமல் போயிருந்தால், அவர்கள் சென்ற இடம் தொடர்பில் தகவல் தெரியாவிட்டால், அது தொடர்பில் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அவ்வாறு எவரேனும் முறைப்பாடு செய்யும் பட்சத்தில் அந்த உறவினர்களை அழைத்து சிதறுண்ட உடற்பாகங்களை மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

சம்பவத்தில் அடையாளம் காணப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இதுவரைஅடையாளம் காணப்படாத சிதறுண்ட 56 உடற்பாகங்கள் கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்