பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் சிறீதரன் எம்.பி தலைமையில்!

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களது 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கம்பரலிய ஊரெழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தலைமையில் பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று மு.ப 10.00 மணியளவில் ஆரம்பமானது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது விசேட ஒதுக்கீட்டின் கீழ் கம்பரலிய ஊரெழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் பூநகரி பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமிய வீதிகள், ஆலயங்கள், பாடசாலைகள், மைதானங்கள் போன்றவற்றை அபிவிருத்தி செய்யவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம், மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது

கம்பரலிய ஊரெழுச்சி வேலைத்திட்டத்தின் மூலம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களூடாக 38 அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மேற்படி அபிவிருத்திக் கலந்துரையாடலில் பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்ணேந்திரன் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் ஐயம் பிள்ளை உதவி பிரதேச செயலாளர் உதவித்திட்டமில்ப்பணிப்பாளர்  மற்றும் கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட்டார அமைப்பாளர்கள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்ட ஒப்பந்தகாரர்கள், பயனடைவோர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

7 Attachments

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்