பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற செயற்குழு இன்று கூடவுள்ளது.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பிலும், நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் நேரத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ள இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் புதிய பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் கட்சி தலைவர்களுக்கு தௌிவுப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை பாதுகாப்பு நிமித்தம் மூடப்பட்டுள்ள பாராளுமன்ற பொதுமக்கள் கெலரியை நாளை முதல் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்