மடப்பள்ளி அமைக்க சரா எம்.பி நிதி ஒதுக்கீடு!

சுழிபுரம் பேச்சி அம்மன் ஆலய மடப்பள்ளி அமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் நிதி ஒதுக்கியுள்ளார்.

ஊரெழுச்சித் திட்டத்தின் ஊடாகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுழிபுரம் பேச்சி அம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், ஆலய நிர்வாகத்தினரால் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து, புதிய மடப்பள்ளிக்கான அடிக்கல்லை நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டிவைத்தார். நாடாளுமன்ற உறுப்பினருடன் வலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் உமாபதியும் கலந்துகொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்