முல்லைத்தீவில் படகுமூலம் கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்!

முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடற்கரை பகுதியில் படகுமூலம் கஞ்சா கடத்த முற்பட்ட நபர்களில் இருவரை பொலி ஸார் நேற்று (05) கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில், முல்லைத்தீவுக்கு கடல் வழியாக கஞ்சா கடத்தல் இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்ட பெருங்குற்றப் பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய பெருங்குற்றப் பிரிவு பொலிஸ் அதிகாரி ஐ.பி. கெங்காநாத் தலைமையிலான பொலிஸார் தீர்த்தக் கரைப் பகுதியில் தீவிர கண்காணிப்பினை மேற்கொண்டனர்.

படகு ஒன்று கரையை அடைந்துள்ளதை இனம்கண்டு அந்த இடத்துக்கு சென்றபோது அதில் வந்து இறங்கிய நால்வரில் இருவர் தப்பி ஓடிய நிலையில் இருவரை பொலிஸார் துரத்தி சென்று கைது செய்துள்ளனர்.

இவர்கள் கள்ளப்பாடு தெற்கு பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன் இவர்களிடம் இருந்து 350 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இருவரையும் குறித்த படகினையும் கைது செய்த பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் வாசல்தலத்தில் நேற்று முன்னிலைப்படுனர்.

இவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்