மாவையின் நிதியில் வசாவிளானில் அபிவிருத்தி யுத்தம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதி ஆகியவற்றின் தலைவரும், வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசாவின் நிதி ஒதுக்கீட்டில் வசாவிளான் வீதி புனரமைப்புப் பணிகள் பூர்த்தியாகியுள்ளன.

வலிகாமம் வடக்கு பிரதேசசபையில் வசாவிளான், குட்டிபுலம் ஆகிய பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டார உறுப்பினர் ப.யோகராசாவின் வேண்டுகைக்கு அமைவாக வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமையவே நாடாளுமன்ற உறுப்பினரால் இந்த வேலைத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு, வசாவிளான் மேற்கில் உள்ள கரம்பக்கடவை வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று, வேலைகள் முடிவுறுத்தப்பட்டு வீதி மக்களின் பாவனைக்காக விடப்பட்டுள்ளது.

மீள் குடியேற்றப்பட்டு, சகல வசதிகளும் குறைந்து காணப்படும் வசாவிளான் பிரதேசத்தில் இதுவரை எந்த அரசியல் கட்சியும மேற்கொள்ளாத ஒரு அபிவிருத்தி யுத்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்டுள்ளனர் என மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்