வசாவிளானில் இருபாடசாலைகளுக்கு மாவையின் நிதியில் சிமாட் வகுப்பறை!

வசாவிளான் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டு, மிகவும் வசதிகுறைந்த நிலையில் இயங்கும் பாடசாலைகளான குட்டியப்புலம் அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலை, ஒட்டகப்புலம் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவின் கம்பெரலியா நிதி ஒதுக்கீட்டின் ஊடாக சிமாட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, கடந்த 4 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினரால் திறந்துவைக்கப்பட்டன.

வலிகாமம் வடக்கு பிரதேசசபையில் வசாவிளான், குட்டிபுலம் ஆகிய பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டார உறுப்பினர் ப.யோகராசாவின் வேண்டுகைக்கு அமைவாக வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமையவே நாடாளுமன்ற உறுப்பினரால் இந்த வேலைத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திறப்பு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு பிரதேசசபையில் வசாவிளான் வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ப.யோகராசா மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி, பிரதமரின் அமைச்சு ஆகியவற்றின் செயலாளர் சிவஞானசோதி, யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், வலி.வடக்கு பிரதேச செயலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்