வேலணை மத்தியகல்லூரி அபிவிருத்திக்கு சிறி நிதி ஒதுக்கீடு!

வேலணை மத்திய கல்லூரியின் அபிவிருத்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஒரு மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார்.

வேலனை பிரதேச சபையின் உறுப்பினரும் வேலணை மத்திய கல்லூரியின் பழையமாணவருமாகிய சிவலிங்கம் அசோக்குமாரின் வேண்டுகைக்கு அமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினரால் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியில் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்களை பாடசாலை அதிபர், பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்