வல்வெட்டி அரசினருக்கு விளையாட்டு முற்றம் அடிக்கல்லை நாட்டினார் சுமந்திரன்!

வல்வெட்டித்துறை அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலயத்துக்கு விளையாட்டு முற்றம் அமைப்பதற்கான அடிக்கல் கடந்த 3 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனால் நாட்டப்பட்டது.

கல்லூரி நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனின் சிபாரிசுக்கமையவே இந்த நிதி நாடாளுமன்ற உறுப்பினரால் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனும் இணைந்து இந்த விளையாட்டு முற்றத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்