யாழ். பல்கலை துணைவேந்தர் இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணப் பல்கலைகழகத் துணைவேந்தர் இ.விக்னேஸ்வரன் தற்காலிகமாகப் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் மூலமாக இதனை அறிவித்துள்ளார்.

குறித்த கடிதம் இன்று (06) தொலைநகல் மூலமாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரால் கையொப்பம் இடப்பட்ட குறித்த கடிதத்தில், பதவி இடைநிறுத்தம் தொடர்பான காரணங்கள் அல்லது வேறு தகவல்கள் எவையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்