மன்னார் திருக்கேதீஸ்வரத்தின் அருள்மிகு ஹீ மீனாட்சி அம்பாள் ஆலய நவநாயகர் வசந்த மண்டப கும்பாபஷேக அலங்கார உற்சவம்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தின் கிழக்கே ஈச்சளவக்கை பசுமை நிறைந்த கிராமத்திலே எழுந்தருளி அருள்பாலித்து வருகின்ற அருள்மிகு ஹீ மீனாட்சி அம்பாள் ஆலய நவநாயகர் வசந்த மண்டப கும்பாபிஷேக அலங்கார உற்சவம் கடந்த 24/04 பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று 25/04.பக்த்தர்கள் எண்ணெய் சாத்தும் நிகழ்வு நடைற்று 26/04 நவக்கிரக வசந்த மண்டப கும்பாபிஷேகம் நடைபெற்று அதனை தொடர்ந்து பத்து நாட்கள் கிரியாகால நிகழ்வுகள் நடைபெற்று

அடியவர்கள் அன்னதானம் ஈச்சளவக்கை மக்களால் வழங்கப்பட்டு 05/05/2019அன்று 108அஷ்டோத்திரதச சங்காபிஷேகம் மதியம் 1:30மணியளவில் நடைபெற்று அதனை தொடர்ந்து செடில் காவடி எடுக்கப்பட்டு இரவு தீச்சட்டி , காவடிகள் பக்த அடியவரகளால் எடுக்கப்பட்டு தீ மிதிப்பு நடைபெற அம்பாள் வெளி வீதி உலா வந்து எழுந்தருளியில் வசந்த மண்டபத்திலே அமர்ந்து அருளை வழங்க

அத்தோடு காவடிகள் இறக்கப்பட்டு அடியார்கள் அன்னதானம் உண்டு கலைந்தார்கள்

நேற்று 06/05/ வைரவர் பூசை நடைபெறு கின்றது என்பதோடு உச்சவகால குருமார்களாக விசேட குரு சிவஹீ கண்ணன் சர்மா திருக்கேதீஸ்வர திருத்தளம் ஆலய பிரதம குரு சிவஹீ பன்னீர்செல்வம் குருக்கள் தட்சனாமருதமடு பாலம்பிட்டி உதவி அர்ச்சகர்கள் பொ.மேகன் சர்மா சாத்துப்படி யோகராசா பாலம்பிட்டி ஆகியவர்கள் இந்த விழாக்கால பூஜைகளை சிறப்புற நடாத்திநார்கள்

நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி நடைபெற்றது அம்பாளின் துணை நின்று என்பதோடு இவ்வாலயத்திற்கு அப்பாள் அமைந்து இருக்கின்ற இராணுவ கொமண்டோ பயிற்சி பாடசாலை இராணுவீரர்கள் இரவு சிறு பாதுகாப்பையும் தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்