தண்ணீரில் விழுந்த ஐபோன்.. மீட்டெடுத்த திமிங்கலம்! வைரலாகும் வீடியோ

நார்வே நாட்டில் தண்ணீரில் விழுந்த ஐ போன் ஒன்றை, திமிங்கலம் மீட்டெடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நார்வே நாட்டில் கடந்த வாரம் சந்தேகத்திற்குரிய திமிங்கலம் ஒன்று பிடிபட்டது. அது ரஷ்யாவினால் உளவு பார்க்க அனுப்பப்பட்டிருக்கும் என்று சந்தேகிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், குறித்த திமிங்கலத்தை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அதே வேளையில் பெலுக்கா இனத்தைச் சேர்ந்த திமிங்கலம் ஒன்று, தண்ணீருக்குள் தவறி விழுந்த ஐ போன் ஒன்றை தனது வாயால் கவ்விப் பிடித்து, அங்கிருந்தவர்களிடம் ஒப்படைத்தது.

இதுதொடர்பான வீடியோ பலரையும் கவர்ந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எனினும், இரு சம்பவங்களிலும் தொடர்புடைய திமிங்கலமும் ஒன்று தான் என்று சிலர் கூறி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்