முக்கோண ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது

இதேவேளை, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான முன்னோடியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முக்கோண ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி சாய் ஹோப்பின் சதத்துடன் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 261 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் 45 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இந்தப் போட்டியானது பாகிஸ்தான் நடுவர் அலிம் டாரின் 200 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியாக பதிவானது.

இந்த முக்கோண ஒருநாள் தொடரில் பங்களாதேஷ், மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடுகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்