நோர்த் யோர்க் வைத்தியசாலையில் கார் திருடிய குற்றச்சாட்டு – பெண்ணொருவர் கைது

கடந்த மாதத்தில் நோர்த் யோர்க் வைத்தியசாலையில் பணியாளர்கள் பகுதியிலிருந்து, கார்ச் சாவிகளைத் திருடி, காரை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 27 வயது பெண் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் 4ஆம் திகதி காலை 6.30 அளவில் குறித்த அந்தப் பெண், லெஸ்லி ஸ்ட்ரீட் மற்றும் ஷெப்பார்ட் அவென்யூ கிழக்கு பகுதியில் உள்ள குறித்த வைத்தியசாலையில் பணியாளர்களின் பாதுகாப்பு பெட்டகங்கள் உள்ள பகுதிக்குள் நுளைந்துள்ளார்.

இதன்பின்னர் அங்கிருந்து கார் சாவிகள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களையும் அபகரித்துக்கொண்டு, வைத்தியசாலைக்கு வெளியே சென்று, திருடிய கார் சாவிக்குரிய காரை இனங்கண்டு,அதனை அங்கிருந்து செலுத்திச் சென்றதாக பொலிஸார் தகவல் வெளியிட்டு்ள்ளனர்.

இதேவேளை அங்கிருந்து அவர் வங்கி அட்டைகளையும் திருடியதாகவும், அதன்மூலம் மோசடியான நிதிப் பண்டமாற்றுகளையும் அவர் மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவைச் சேர்ந்த 27 வயதான மெலனி பெஸ்கொறோவானி என்பவரைக் கைது செய்தனர்.

அவர் மீது வாகன திருட்டு, மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.குறித்த பெண் ஒன்ராறியோவில் இது போன்ற மேலும் பல சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று நம்புவதாகவும் சந்தேகம் வெளியிட்டுளளனர்.

அத்தோடு இது தொடர்பாக மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்