கனேடிய அரசாங்கத்தை பாராட்டி அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றம்

கனேடிய அரசாங்கத்தை பாராட்டி அமெரிக்க செனட் சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், கனடா செயற்பட்ட விதத்தை பாராட்டும் விதமாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தில் சட்ட விதிகளை பின்பற்றி செயற்பட்டமைக்காக கனேடிய அரசாங்கத்தை அமெரிக்கா பாராட்டியுள்ளது.

சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாவியின் தலைமை நிதி அதிகாரி, அமெரிக்காவின் தலையீட்டுக்கமைய கனடாவின் வான்கூவர் நகரில் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கனேடியர்கள் இருவர் சீனாவில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்