பாலர் பாடசாலை சிறுவர் பூங்காவுக்கு சாந்தி எம்.பி. நிதி ஒதுக்கீடு!

வவுனியா கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணித் துணைத்தலைவரும், வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவருமான திரு பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ Dr.ப.சத்தியலிங்கம் அவர்களின் சிபார்சில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களினால் கூமாங்குளம், அம்பாள் பாலர் பாடசாலைக்கு சிறுவர் பூங்கா அமைத்தலுக்காக 5 லட்சம் ரூபா  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பிலான அனுமதிக் கடிதம் கடந்த 02.03.2019 அன்று கூமாங்குளம், அம்பாள் பாலர் பாடசாலை பொறுப்பாசிரியர் மற்றும் கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்