இந்தோனேசிய சிறைச்சாலையில் கலவரம் – 150 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 150 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறைச்சாலையில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட கலவரத்தினைத் தொடர்ந்து கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் 115 கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், தப்பியோடியுள்ள ஏனைய கைதிகளை மீண்டும் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலவரம் ஏற்பட்ட இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள சிறைச்சாலையில் சுமார் 650 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் கலவரம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்