ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள சிலாபம் நகர பகுதியின் தற்போதைய நிலை

சிலாபம் நகர பகுதியில் நாளை காலை வரையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி, மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அத்துடன் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டின் கீழ் குறித்த பகுதியில் தற்போது சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சிலாபம் நகர பகுதியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகே வந்த இளைஞர்கள் சிலர், அப்பகுதியில் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக வெளியான செய்தியின் உண்மை தன்மை தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு கோரியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

மேற்படி சம்பவம் காரணமாக அந்தப் பகுதியிலுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதுடன், தற்போது மக்கள் நடமாட்டம் குறைந்து சிலாபம் நகர பகுதி வெறிச்சோடி காணப்படுவதாக தெரியவருகிறது.

மேலும், அந்தப் பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரங்கு சட்டம் நாளை காலை ஆறு மணி வரை அப்பகுதியில் மாத்திரம் அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்