அமெரிக்கா இஸ்ரேலின் வளர்ப்பு நாய்கள்தான் ஐஎஸ் பயங்கரவாதிகள் சர்வமத தலைவர்களின் ஊடக சந்திப்பில் குற்றச்சாட்டு.

சிறிலங்காவில் ஏற்பட்ட ஐஸ்ஐஸ் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின் மக்களிடையே ஒற்றுமையை சீர்தூக்க சர்வமதத்தலைவர்களின் ஊடக சந்திப்பு நேற்று (13) கல்முனை இல்லத்தில் 4 மணியளவில் இடம்பெற்றது.
.
இன ஐக்கிய சம்மேளன ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சகல இனங்களையும் உள்ளடக்கிய ஐக்கியமாக வாழும் சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கத்தோடு மத தலைவர்கள் ஒன்றிணைந்து செய்தியாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தனர்.

சர்வமதத்தலைவர்கள் சமாதானத்தை ஏற்படுத்த. ஊடகங்கள் வாயிலாக இவ்வாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தினர்.

இங்கு உரையாற்றிய அஸ்வர் மௌலவி அவர்கள்:

இந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் முஸ்லிம்களே அல்ல அவர்கள் அமெரிக்க, இஸ்ரேலிய ஏகாதிபத்தியத்தின் வளர்ப்பு நாய்கள். பயங்கரவாதிகள் ஏன் அருகிலுள்ள இஸ்ரேல் நாட்டை தாக்காமல் தொலைவிலுள்ள இஸ்லாமிய நாடுகளிலே நாசம் செய்கின்றனர்.இவர்களது பிரதான நோக்கமே முஸ்லிம்களின் நிம்மதியை குலைத்து அழித்தொழிப்பதே.

ஹபாயா அணிந்து தாக்குதல் நடாத்திய இருவரால் எல்லாப்பெண்களையும் பயங்கரவாதிகள் போல் உடற்சோதனை நடார்த்த வேண்டாம். என முப்படையினரையும் கேட்டுக்கொண்டார்.

கிருத்துவ மத போதகர் கிருபைராஜா பேசுகையில் :

நாங்கள் ஒவ்வொருவரும் கடந்த உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற கொடூர சம்பவத்தை மன்னித்து இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் இனிவரும் காலங்களில் வதந்திகள் மூலம் கலவரங்கள் பரவாவண்ணம் பாத்துக்கொள்ள வேண்டும்

கிறிஸ்த்தவம் யாரையும் துன்புறுத்தும் மார்க்கமல்ல கருணையையும் அன்பையும் மன்னிப்பையும் மக்களிடம் போதிக்கும் மார்க்கமே என தெரிவித்தார்.

கிழக்கு மாகாண இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் கருத்து தெரிவிக்கையில்:

யுத்தகாலங்களில் கூட வணக்கஸ்த்தலங்களில் நிம்மதியுடன் வணக்க வழிபாட்டுக்களை மேற்கொண்டு வந்தனர். ஆனால் இன்று சுபீட்ச்சமான வழிபாட்டினை மேற்கொள்ள அச்சப்பாங்குடனே மத ஸ்தலங்களுக்கு வழிபாட்டினை மேற்கொள்ளவேண்டியிருப்பதாக சுட்டிக்காட்டினர்.

நான்குமதங்களின் சங்கமமாக இருக்கும் கல்முனை பிரதேசத்தில் நாம் இலங்கையர் எனும் அடிப்படையில் சமாதானத்தை நிலைநாட்ட ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய மதத்தலைவர்களாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.

பௌத்த மத தலைவர்கள் தங்களது கருத்தினை தெரிவிக்கும்போது:

கத்தோலிக்க தேவாலங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின்பின் சிங்கள, தமிழ்,முஸ்லிம், மக்களின் இயல்பு நிலைதான் பாதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் சிங்களவர்களாக இருந்தாலும்,தமிழர்களாக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும் பயங்கரவாதிகள்தான். தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிங்களாக இருந்தாலும் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஓரம்கட்டிவிடகூடாது.

மதத்தலைவர்கள் என்ற ரீதியில் சாந்தியையும் சமாதானத்தையும் மக்களின் மனங்களில் போதித்து சுபீட்சமான இலங்கைக்குள் ஒற்றுமையைப்பலப்படுத்த எம்மாலான பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும்.

எம்மிடையே நல்ஒற்றுமையை வளக்க வேண்டுமெனில் இறக்காமம் மாணிக்க மடு பௌத்த தேவாலயத்தையும் புனரமைப்பதனால் மேலும் எம்முள் சசோதரத்துவத்தை பேண முடியும்.

கல்முனைப்பிரதேசத்து மக்களது மிக முக்கியமான அடிப்படைத்தேவையாக இருக்கின்ற கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு முஸ்லிம் மதகுருமாரும் பள்ளிவாசல் உலமாசபைகளும் ஒருபோதும் தடையாக இருக்காது.ஏன் எனில் தமிழ் மக்களது நியாயமான கோரிக்கை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது சிலரது அரசியல் இலாபங்களுக்காக தடையாக இருப்பதை இஸ்லாமிய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அஸ்வர் மௌலவி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

சர்வதேச சக்திகளே முஸ்லிம்களில் ஒருசில குழுக்களை தோற்றுவித்து ஒற்றுமையுடன் வாழும் மக்களைளிடையே முறுகல் நிலையை தோற்றுவிக்க முனைகின்றனர். இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இஸ்லாம் இடம்கொடுக்கவில்லை. இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என சர்வ மதத்தலைவர்கள் வலியுறுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்