வடமேல் மாகாணத்தில் தொடர்ந்து ‘ஊரடங்கு!’

வடமேல் மாகாணத்தில் நேற்று மாலை பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம், தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கின்றது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதை அடுத்து வடமேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் கம்பஹா மாவட்டத்திலும், ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதையடுத்து, நாடு முழுவதிலும் நேற்றிரவு 9 மணி தொடக்கம் இன்று அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்குச் சட்டம் கம்பஹா மாவட்டத்தில் காலை 6 மணியுடனும், நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணியுடனும் நீக்கப்பட்டது.

எனினும், குருணாகல், புத்தளம் மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேல் மாகாணத்தில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கின்றது என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
………

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்