தற்கொலைதாரிகளால் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் குறித்து ஆராயும் நடவடிக்கை ஆரம்பம்!

இலங்கையில் தற்கொலைத்தாரிகளால் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் குறித்து ஆராயும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலிஅங்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளுக்காக வெடிச்சம்பவம் இடம்பெற்ற இடங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிணங்க, பயங்கரவாத வெடிப்புக்களுக்காக பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் தொடர்பாக இந்த வாரத்துக்குள் விசாரணைக்குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் தொடர்பாக பரவிவரும் பல்வேறு வதந்திகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்