அமெரிக்க படைகளும் இலங்கைக்கு வருகிறதா?

அமெரிக்க படைகளையும் இலங்கைக்கு கொண்டுவரும் வகையில் செயற்பாடுகளை எவரும் முன்னெடுக்க கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தொலைகாட்சியொன்றுக்கு நேற்று (திங்கட்கிழமை) வழங்கிய நேர்காணலியே விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அசாதாரண நிலைமையை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதளவுக்கு இளைய தலைமுறையினர் செயற்பாடுகளை முன்னெடுக்க கூடாதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நாட்டுக்குள்ளே இடம்பெறும் வன்முறை சம்பவங்களை அவதானித்துகொண்டிருப்போமாயின் வேறு நாடுகளிலிருந்து வரும் ஆபத்துக்களை எம்மால் அறிந்துகொள்ள முடியாமல் போகுமெனவும் விமல் கவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது அமெரிக்கா  நமது நாட்டுக்கு வந்து செயற்பட ஆரம்பித்தால் அதனை தடுக்க முடியாமல் போய்விடுமென அவர் தெரிவித்துள்ளார்.

சிரியா அல்லது லிபியா போன்று நாட்டை உருவாக்கி விட வேண்டாமென விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்