சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி உதவி

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.

இலங்கைக்கு 5ஆவது கட்ட கடன் தொகையாகவே இந்த தொகையை சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்றது.

இலங்கை மத்திய வங்கி அந்நிய செலவாணி கையிறுப்புக்கான திட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்காமையினால் கடன் தொகையை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலவாணி கையிறுப்பு குறித்து சர்வதேச நாணய நிதியம் திருப்தியடைந்துள்ளமையினாலேயே இந்த தொகையை விடுவிப்பதற்கு முன்வந்துள்ளதாக அந்நிதியத்தின் பிரதி நிர்வாக பணிப்பாளரும் சபையின் பதில் தலைவருமான மிட்சுஹிரு புருஸ்வா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்