மீண்டும் மீண்டும் இலங்கை அரசாங்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் தமிழ் மக்கள்!

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் சிற்றூண்டிசாலை உரிமையாளர் ஆகிய மூவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்னமும் விடுதலை செய்யப்படாமல் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் திங்கள் கிழமை சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து இது தொடர்பான விடயம் அறிவிக்கப்படும் என எதிர்பார்கப்பட்ட போதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

எனவே இவ்வாறான நிலைமைகளை பயன்படுத்தி இலங்கை அரசங்கம் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் பல்கலைகழக மாணவர்களையும் அச்சுறுத்த முற்படுகின்றது என்ற சந்தேகம் எழும்புவதாக முன்னால் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மன்னார் புதிய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

இதே போன்று அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாடியதாகவும் பிறந்த தினத்தின் போது கேக் வெட்டியதாகவும் விடுதலைப் புலிகளின் பதாதை வைத்திருந்தாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் உப விதிகளின் அடிப்படையில் தன் மீதும் வல்வட்டிதுறை நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர் ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், வருகின்ற மே மாதம் 31 திகதி பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் படி பணிக்கப்பட்டுள்ளது

அதே நேரம் இவ்வாறான வழக்குகளில் பிணை வழங்க நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என்பதால் நாங்கள் பல மாதங்கள் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்படகூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

இவ்வாறான விடயங்கள் ஊடாக தமிழ் மக்களை பல்கலைக்கழக மாணவர்களையும் தொடர்சியாக இலங்கை அரசாங்கம் அச்சுறுத்த முற்படுகின்றதா என கேள்வி தோன்றுவதாகவும் தெரிவித்தார்

அதே நேரம் வருகின்ற 16ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆயர் செய்யப்படுகின்றபோது பிணைவழங்கப்படாத பட்சத்தில் மக்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்களும் எழுச்சியில் திரண்டால் மாத்திரமே தடுக்க முடியும் அவ்வாறு இல்லாவிட்டல் 18 ஆம் திகதி இதற்கான பதிலை முள்ளிவாய்கால் மண்ணில் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் காட்டுவதற்கு பல்கலைகழக மாணவர்களும் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் ஒண்டு திரண்டு அணிதிரளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்