வெறுக்கத்தக்க செயற்பாடுகளினால் நாட்டை இழக்க நேரிடும்: குமார் சங்ககார

வன்முறை, இனவாதம் மற்றும் வெறுக்கத்தக்க செயற்பாடுகளினால் நமது நாட்டை நாம் இழக்க நேரிடுமென இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குமார் சங்ககார இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் பிரிவினைக்கு உடபட்ட அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருப்பது சிறந்ததெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் அமைதியாக இருந்து ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டுமெனவும் குமார் சங்ககார வலியுறுத்தியுள்ளார்.

ஆகையால் காயங்களிலிருந்து குணமடைந்து நாம் மீண்டும் எழ வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்