அரச நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை!

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று(செவ்வாய்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மேல் மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலுக்கு செல்வதற்கு அரச அதிகாரிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் வருகை தராமை ஆகியவற்றை கருத்தில்கொண்டு அரச அதிகாரிகளுக்கு விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானித்ததாகவும் வட மேல் மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

வட மேல் மாகாணத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்