நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!

நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வரகாபொல பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றை செய்வதற்காக வருகைத் தந்த போதே அவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

இதேவேளை, ஹெட்டிபொல நகரில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைதியின்மையின் போது, நாமல் குமாரவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்குமிடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றக் காட்சிகள் ஊடகங்கள் ஊடாக வெளியாகியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்