வன்முறைக் களத்தில் நின்ற நாமல் குமார இன்று கைது!

ஜனாதிபதி கொலைச் சதியை அம்பலப்படுத்தியவரும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் எனத் தெரிவிக்கப்படுபவருமான நாமல் குமார, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வரக்காப்பொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்ய வருகை தந்தபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று ஹெட்டிபொல நகரில் முஸ்லிம்கள் மீது சிங்களவர்கள் மேற்கொண்ட வன்முறையின்போது, நாமல் குமாரவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பியும் பொலிஸ் நிலையத்துக்கு முன்னாள் நின்ற காட்சிகள் ஊடகங்கள் மூலமாக வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்