மினுவாங்கொட மோதல் – 13 பேர் கைது!

மினுவாங்கொடயில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிலையங்கள் பல தாக்கப்பட்டு, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமைத் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மினுவாங்கொடையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்