இனவெறிக்கு எதிராக எழுந்து நிற்போம் – இலங்கை அணியின் தலைவர்!

இனவெறிக்கு எதிராக எழுந்து நிற்போம் என இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இது எமது நாடு. தயவுசெய்து எமது இலங்கையை அழிக்க வேண்டாம்.

ஒவ்வொருவர் மீது வெறுப்புடன் செயற்பட்டால் நாடு என்ற ரீதியில் எப்போதும் அபிவிருத்தி அடைய முடியாமல் போய்விடும்.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்தியுங்கள். எமது எதிர்காலமும் உங்களது தற்போதைய நடவடிக்கையில் தான் இருக்கிறது. அன்பை பரப்புங்கள். இனவெறிக்கு எதிராக எழுந்து நிற்போம்’ என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்