மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க கைது

மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்தெனிய பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

விசேட பொலிஸ் குழு ஒன்றினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மை குறித்த விசாரணைகளுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்