காடையர்களின் வெறியாட்டம்: அமித் வீரசிங்கவும் சிக்கினார்!

மாஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று நாட்டின் பல இடங்களிலும் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில், விசாரணை செய்வதற்காகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியொருவரின் மேற்பார்வையின் கீழான விசேட பொலிஸ் குழுவால் கண்டி – தெல்தெனியவில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

நேற்று முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்த பகுதிகளில் அமித் வீரசிங்க காணப்பட்டார் எனவும், வன்முறைகளை இவர் வழிநடத்தினார் எனவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையிலேயே, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, கடந்த வருடம் மார்ச் மாதம் கண்டி, திகன மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களக் கும்பலினால் நடத்தப்பட்ட வன்முறைகளின்போது அமித் வீரசிங்க கைதுசெய்யப்பட்டு 7 மாதங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்