காத்தான்குடியில் கைக்குண்டு, ஆயுதங்கள் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு, காத்தான்குடி களப்பு பகுதியில் கைக்குண்டு மற்றும் ஆயுதங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காத்தான்குடி, முதலாம் பிரிவின் வாவிக்கரை வீதியில் உள்ள களப்பு பகுதியை சோதனையிட்டனர்.

இதன்போது, அங்கிருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும், 5 மகசீன் துப்பாக்கி ரவைகள், கைக்குண்டு ஒன்றுஷ, வாள், 2 கத்திகள் மற்றும் தொலை நோக்கு கருவி ஒன்று உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

குறித்த வெடிபொருட்களை இராணுவத்தினர், தம்மிடம் ஒப்படைத்துள்ளனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்