விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்துள்ள இந்தியா!

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஏற்கனவே இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை மேலும் நீடிப்பதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டடுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த தடை நீடிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

விடுதலைப்புலிகளின் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன எனவும், தமிழகத்தில் விடுதலைப்புலிகள், ஆதரவை பெருக்குவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டு இந்திய அரசின் உத்தரவிற்கமைய எதிர் வரும் 2024ஆம் ஆண்டு வரை “ஊபா” அதாவது (Unlawful activities prevention act) என்ற சட்டத்தின் கீழ் தடை நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்