வடமேல் மாகாணத்தில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில்!

வடமேல் மாகாணத்தில் உடன் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இதுவரையும் நீக்கப்படவில்லையென பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர்.

வடமேல் மாகாணத்தின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று மாலை மறு அறிவித்தல் வரையான பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதையடுத்து தொடர்ந்தும் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் காரணமாக, வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வட மேல் மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.

தொழிலுக்கு செல்வதற்கு அரச அதிகாரிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் வருகை தராமை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அரச அதிகாரிகளுக்கு நேற்று விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

வடமேல் மாகாணத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்தும் இதன்போது கவனஞ்செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வடமேல் மாகாணத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரச நிகழ்வுகளும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்