மட்டக்களப்பில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழப்பு

மட்டக்களப்பு- காத்தான்குடி, கர்பலா பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) கர்பலா கிராமத்திலுள்ள குப்பை மேட்டில், பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த கைக்குண்டுகள் காணப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கும் அதிரடிப்படையினருக்கும் அறிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் காத்தான்குடி பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேலும் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தபோதிலும் வேறு எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை. பின்னர், விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு இரண்டு குண்டுகளும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்