முல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு- பரந்தன் ஏ35 வீதியின் உடையார் கட்டு சந்திப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் உழவனூர்- புன்னை, நீராவியடி பகுதியினை சேர்ந்த இ.தவரூபன் (41 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உடையார்கட்டுக்கு வியாபாரத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, தனியார் பேருந்து ஒன்றில் மோதி தவரூபன் உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு வீதிப்போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதோடு உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பேருந்தின் சாரதியை கைது செய்த பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது நீதிபதி, சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்