வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி டிப்புளோமா இறுதிப் பரீட்சை தொடர்பான செய்தி

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கல்வியல் கல்லூரி இரண்டாம் வருட மாணவர்களுக்கான பிற்போடப்பட்ட கற்பித்தலில் தேசிய டிப்பிளோமா இறுதிப்பரீட்சை ஆனது 2019 மே மாதம் 21, 23, 25, 27, 29, 31 ஆம் மற்றும் 2019 யூன் 01 ஆம் திகதிகளில் நடைபெறும் என பரீட்சை திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே தேசிய கல்வி நிறுவகத்தினால் நடத்தப்படுகின்ற பரீட்சைகள் 2019 யூன் மாதம் 10, 11, 12 திகதிகளில் நடைபெறும் என வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி கெ.சுவர்ணராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் இரண்டாம் வருட ஆசிரியப் பயிலுனர்கள் 19.05.2019 மாலை நாலு மணி தொடக்கம் 5.00 மணி வரை அல்லது 20.05.2019 மதியம் 12.00 மணிக்கு முன்னர் மதிய உணவுடன் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரிக்கு தவறாது சமூகம் தருமாறு கோரப்படுகிறார்கள்.

அவ்வாறு சமூகம் தருபவர்கள் கையடக்க தொலைபேசி மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை கொண்டு வருவதை தவிர்க்குமாறு கல்லூரி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்