முஸ்லிம்கள் மீது வன்முறை: இதுவரை 74 பேர் சிக்கினர்!

குருணாகல், புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 74 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று மாலை தெரிவித்தார்

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 33 பேர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவசரகாலச் சட்ட விதிமுறை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச கொள்கைப் பிரகடனம் ஆகிய சட்டங்களின் கீழ் சந்தேகநபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல் நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரமே சந்தேகநபர்களால் பிணை கோர முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்