நாட்டில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும் அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை கைவிடவில்லை.அமைச்சர் ராதாகிருஸ்ணன் தெரிவிப்பு.

மலையகத்தில் இன்று இந்த அரசாங்கம் வந்த பின் வீடுகளை கட்டிகொடித்திருக்கின்றோம். வீதிகளை அபிவிருத்தி செய்திருக்கின்றோம். பாடசாலை கட்டிடங்களை கட்டிக்கொடுத்திருக்கின்றோம். இந்த தோட்டத்திற்கு கூட வீடமைப்பு அதிகாரசபையின் 25 வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.தோட்டப்பகுதிக்கு அதிகாமான அபிவிருத்திகளை மேற்கொண்டது. இந்த அரசாங்கமே இன்று இந்த அரசாங்கத்திற்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்த போதிலும் அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை கைவிடவில்லை என விசேட பிராந்தியங்களுக்கான கெபினட் இல்லாத அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

டயகமவிலிருந்து சந்திரகிராமம் செல்லும் கடந்த பல வருடகாலமாக குன்று குழியுமாக நடந்து கூட செல்ல முடியாத நிலையில் காணப்பட்டது. இந்த வீதியின் ஒரு கிலோமீற்றர் தூரம் ரன்மாவத்தை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுமார் 19 மில்லியன் ரூபா செலவில் காபட் இட்டு அபிவிருத்தி செய்யும் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் ராதாகிருஸ்ணன் தலைமையில் (15) திகதி நடைபெற்றது.

அவ்வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று மத்திய மாகாணத்தில் சகல மதுபான சாலைகளும் மூடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனை மூடியதில் இருந்து பலர் எனக்கு தொலைபேசி மூலமாக ஊரடங்கு சட்டம் போட்டுவிடடடார்களா? என பலர் கேட்கின்றனர்.

இதிலிருந்து என்ன தெரிகின்றது பார்கள் மூடினால் ஊரடங்கு சட்டம் போன்று இருக்கும் என்பது தான் ஆனால் இந்த மது பானத்தினால் எத்தனை பிரச்சினைகள் தோன்றியுள்ளது. தனி மனிதனின் அபிவிருத்தி இல்லை பிள்ளைகள் படிக்க முடியாது.பிரதேசங்களில் எந்த வித அபிவிருத்தியும் இல்லை.

கம்பஹா மற்றும் இதர பிரச்சினைகள் கூட மது பானத்தினால் வந்தது. ஆகவே, இன்று முஸ்லிம் என்று சொன்னால் போதும் அவர்களை எதிரிகளாகவே பார்க்கிறார்கள் எல்லா முஸ்லிம்ககளும் எந்த பிரச்சினைக்கு தொடர்பு இல்லை அவர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் 1983 இந்த நாட்டில் ஏற்பட்ட வன்செயல்களின் போது நாமும் இவ்வாறு தான் பாதிக்கப்பட்டோம் தேயிலைகளில் ஒழிந்திருந்தோம் மிகவும் வேதனை பட்டோம் அப்போது எல்லா சிங்களவர்களும் எமக்கு எதிராக இருக்கவில்லை அதில் நல்லவர்களும் இருந்தார்கள் அவர்கள் எமக்கு தேவையான உணவு உட்பட இதர தேவைகளை பூர்த்தி செய்தார்கள் அதே போன்று தான் இன்றும் இதனை உணர்ந்து செயப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்