அனலை தீவு வைத்தியசாலைக்கு புதிய அம்புலன்ஸ் வண்டி கையளிக்கப்பட்டது

புதிதாக பதவியேற்ற பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் பணிப்பின் பெயரில் கடற்படையினரின் உதவியுடன் இன்று அனலைதீவிற்கான புதிய அம்புலன்ஸ் வண்டி கொண்டுவரப்பட்டது

கடந்த மாதம் மத்திய சுகாதார அமைச்சினால் யாழ் மாவட்டத்திலுள்ள் பிராந்திய வைத்தியசாலைகளுக்கான புதிய அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த அம்புலன்ஸ் வண்டிகளில் அனலை தீவு வைத்தியசாலைக்குக்கும் அம்புலன்ஸ் வண்டி வழங்கப்பட்டிருந்தது. புதிதாக பதவியேற்ற பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் தான் பெறுப்பேற்றதுடன் உடனடியாக இந்த பணிப்பினை வழங்கியிருந்தார்.

இதுவரையில் அனலை தீவு பிரதேசத்திற்கு அம்புலன்ஸ் வண்டி ஒன்று கூட இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்தபிரதேச மக்கள் அவசர இலவச அம்புலன் சேவை கூட பெற முடியாதீருந்தனர். இந்த புதிய அம்புலன்ஸ் வண்டி மூலம் பிரதேச மக்கள் பெரும் பயனடைவர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்