யாழில் முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்பு – பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் தேவரிர்குளம் பகுதியில் இரு முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியல் இன்று (புதன்கிழமை) காலை கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அடையாள அட்டைகளை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார், அடையாள அட்டைகளை மீட்டுள்ளனர். மேலும் அந்த அடையாள அட்டைகள் கிழக்கைச் சேர்தவர்களுடையதென தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அடையாள அட்டைக்கு சொந்தமானவர்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்