மனித உயிர்களை காக்க நீதியை நிலைநாட்டுங்கள்: அரசாங்கத்திடம் அங்கிலிகன் ஆயர் வேண்டுகோள்

மனித உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு கட்சி பேதமின்றி நீதியை நிலைநாட்டுமாறு அங்கிலிகன் திருச்சபையின் ஆயர் டிலோராஜ் கனகசபை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் இந்த அர்த்தமற்ற கலவரங்களையும், இன அழிப்பு செயற்பாடுகளையும் நிறுத்துமாறு இலங்கையர்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு மதத்திலும், பிற மதத்தவர்களை வெறுக்குமாரோ, அழிக்குமாரோ குறிப்பிடப்படவில்லை. எனவே, 83ஆம் ஆண்டு இனக்கலவரத்தை ஒரு பாடமாகக் கொண்டு சமூகங்களிடையே விஸ்வாசத்தை நிலைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான வன்முறைகள், கலவரங்களின் மூலம் நாம் நடக்கே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வது மாத்திரமின்றி, இலங்கை திருநாட்டுக்கும் கலங்கம் விளைவிக்க முயற்சிக்கிறோம். எனவே, இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இலங்கை மக்களிடம் கோரினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்