அலாவுதீன் முஹான்தான் கொச்சிக்கடை தற்கொலைதாரி! – மரபணுவில் உறுதி; பெற்றோரும் வாக்குமூலம்

உயிர்த்தெழுந்த ஞாயிறன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய அலாவுதீன் அஹமட் முஹான் என்பவரின் மரபணு, அவரது பெற்றோரின் மரபணுவுடன் ஒத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக் குண்டுதாரியின் மரணம் தொடர்பான விசாரணைகள் நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நடைபெற்றபோது இந்த விடயங்கள் தெரியவந்தன.

சட்ட வைத்திய அதிகாரி, கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

தற்கொலைக் குண்டுதாரியின் தலை தமது மகனுடையது என தாம் சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் அடையாளம் காட்டியதாகவும் அலாவுதீன் அஹமடின் பெற்றோர் நீதிவான் முன்னிலையில் நேற்றுத் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்