முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் ரிஷாத் நேரடித் தொடர்பு! – ஆதாரங்கள் உள்ளன என்கிறார் ரத்தன தேரர்

“அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளமைக்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன.” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றிடம் இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“போதிய ஆதாரங்கள் இருப்பதன் காரணமாகவே நாம் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரத் தீர்மானித்தோம்.

அதேநேரம், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பொது எதிரணியின் சார்பில் கொண்டுவந்தால், அது இன்னும் பெறுமதியானதாக இருக்கும் என்று கருதுகின்றோம்.

ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்