கொழும்பு – மட்டக்களப்பு ரயிலில் மோதி யானை பலி

மின்னேரிய படுஓய பகுதியில் ரயிலில் மோதுண்டு காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளது. மின்னேரிய தேசிய சரணாலயத்திற்குரிய யானையே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து இன்று (புதன்கிழமை) காலை மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த யானை உயிரிழந்துள்ளது.

எனினும், இவ்விபத்தினால் ரயில் போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், ரயில் சேவைகள் வழமைப்போன்று இயங்கியதாவதும் ரயில்வே கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

விபத்தில் 10 முதல் 15 வயதுடைய சுமார் 7 அடி உயரமான யானையொன்றே உயிரிழந்துள்ளதாக மின்னேரியா வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்